தட்டாஞ்சாவடி பள்ளியில் எண்ணறிவு விழா
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் 'எண்ணறிவு விழா' நடந்தது. பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் கீதா முன்னிலை வகித்தார். அன்றாட வாழ்வு, விஞ்ஞானத்தில் கணிதத்தின் பங்களிப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த எண்ணறிவு விழாவில் மாணவர்கள் தங்களின் எண்ணறிவுத் திறன்களை பல்வேறு செய்முறைகள் மூலம் வெளிப்படுத்தினர். இவர்களின் தனித்திறமையைக் கண்டு மகிழ்ந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களைப் வெகுவாகப் பாராட்டினர். விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நித்யா, பிரேமா, காயத்ரி, மாரியம்மா, ரேவதி, தமிழரசி, அருணா, உமாதேவி, கன்னிகா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.