உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நர்சிங் மாணவி தற்கொலை 

 நர்சிங் மாணவி தற்கொலை 

புதுச்சேரி: சோலை நகரில் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். முத்தியால்பேட்டை, சோலைநகரை சேர்ந்தவர் தினேஷ் மகள் நித்தியஸ்ரீ, 19; மதர் தெரசா நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை கல்லுாரி முடிந்து வீட்டிற்கு வந்து, தனது பாட்டி அம்பிகாவிடம் தனக்கு சோர்வாக இருப்பதாக கூறிவிட்டு, வீட்டின் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இந்த நிலையில் இரவு 7 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அவரது தாயார் கலைச்செல்வி தனது மகள் படுத்திருக்கும் அறையை தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அதிர்ச்சியடைந்த அவர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு நித்தியஸ்ரீ துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடன் அவரை கீழே இறக்கி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்ததை உறுதி செய்தனர். புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !