மேலும் செய்திகள்
ஊட்டச்சத்து வார விழா
07-Sep-2025
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது. புதுச்சேரி அரசு நலவழித்துறை மற்றும் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில், தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், காச நோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ அதிகாரி தாரணி தலைமை தாங்கினார். டாக்டர் நாகராஜன் முன்னிலை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் உமா, சுகாதார ஆய்வாளர் இளஞ்செழியன், கிருஷ்ணகுமார், ஆலோசகர் அரிதாஸ் உட்பட டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
07-Sep-2025