மேலும் செய்திகள்
கடலுார் சாலையில் குவிந்திருந்த மண் அகற்றம்
30-May-2026
அரியாங்குப்பம்: பொதுமக்களை அவதுாறாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர். கடலுார் சாலை, தவளக்குப்பம் சந்திப்பு அருகில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அவதுாறாக பேசி வருவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து போலீசார் அங்கு நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர், அரியாங்குப்பம், மணவெளியை சேர்ந்த வாஞ்சியநாதன், 37, என்பதும், மற்றொருவர் நைனார்மண்டபத்தை சேர்ந்த அவிந்த், 36, என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
30-May-2026