உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒதியம்பட்டு கோவில் கும்பாபிஷேகம்

ஒதியம்பட்டு கோவில் கும்பாபிஷேகம்

வில்லியனுார் : ஒதியம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.வில்லியனுார் தொகுதி, ஒதியம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.தொடர்ந்து நடந்து வந்த விழாவில் 4ம் தேதி இரவு முதல் கால யாக பூஜை, 5ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை, இரவு மூன்றாம் கால யாக பூஜை, நேற்று காலை நான்காம் கால யாக பூஜை நடந்தது.தொடர்ந்து காலை 8:00 மணியளவில் பிடாரியம்மனுக்கு கும்பாபிேஷகம், காலை 9:30 மணியளவில் கடம் புறப்பாடு, 9:45 மணியளவில் விமான கும்பாபிேஷகம், காலை 10:00 மணியளவில் முத்துமாரியம்மன் மற்றும் பரிவார ஆலயங்களுக்கும் மகா கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, கோவில் அறங்காவலர்கள் குழுவினர், கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ