உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிட் குடித்த ஒடிசா தொழிலாளி பலி

ஆசிட் குடித்த ஒடிசா தொழிலாளி பலி

புதுச்சேரி : திருட்டு புகாருக்கு பயந்து ஆசிட் குடித்த ரெஸ்டோ பாரில் வேலை செய்த ஒடிசா வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிசா, பாபன்டா பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்குமார் நாயக், 21; கடந்த 2 மாதம் முன்பு வேலை தேடி புதுச்சேரி வந்தார். மிஷன் வீதியில் உள்ள ஸ்கை கார்டன் ரெஸ்டோ பாரில் சப்ளையராக வேலை செய்து கொண்டு, பொன்னையா குட்டி வீதியில் தங்கியிருந்தார். முகேஷ்குமார் நாயக், ரெஸ்டோ பாரில் பணம் திருடி செலவு செய்து வந்தது தெரிந்ததால், போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உரிமையாளர் திட்டமிட்டு இருந்தார். இந்த தகவலால் முகேஷ்குமார் நாயக் பயத்துடன் இருந்து வந்தார். கடந்த மாதம் 25ம் தேதி தான் தங்கியிருந்த அறை கழிப்பறையில் இருந்த ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடன் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் முகேஷ்குமார் நாயக்கை அனுமதித்தனர். ஒடிசாவில் இருந்து வந்த முகேஷ்குமார் நாயக்கின் சகோதரர் ராஜேஷ்குமார் நாயக் கடந்த 1ம் தேதி, சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ