கிறிஸ்தவர்களுக்கு ப்ளம் கேக் வழங்கல்
புதுச்சேரி: கிறிஸ்துமஸ் முன்னிட்டு, உழவர்கரை தொகுதியில் 2 ஆயிரம் கிறிஸ்தவர்களுக்கு ப்ளம் கேக்கினை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி வழங்கினார். கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு, புதுச்சேரி உழவர்கரை தொகுதி, ரெட்டியார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புனித அந்திரேயா ஆலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்ட நாராயணசாமி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள குழந்தை ஏசுவை வழிபட்டார். பின் விழாவில் கலந்து கொண்ட 2 ஆயிரம் பக்தர்களுக்கு பிளம் கேக்கு களை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்., நிர்வாகிகள், திரளான கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.