உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சக்தி நகர் சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் ஓம்சக்தி சேகர் கோரிக்கை

சக்தி நகர் சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் ஓம்சக்தி சேகர் கோரிக்கை

புதுச்சேரி சக்தி நகர் சமுதாய நலக்கூடத்தை உடனே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லிதோப்பு தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நகராட்சி மூலம் நடந்து வரும் பணிகள் மந்த கதியிலும், முடிக்கப்பட்ட பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. குறிப்பாக, கே.சி. நகர் பகுதியில் புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்டு 15 நாட்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. சக்தி நகர் சமுதாய நலக் கூடம் திறக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. உடனடியாக அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். சக்தி நகர் மூன்றாவது தெரு பல ஆண்டுகளாக இருந்த கழிப் பிடம் இடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், அந்த இடத்தில் பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. ஆகையால், அப்பகுதி மக்களிடம் கலந்து ஆலோசித்து, பணிகளை உடனே துவங்க வேண்டும். குயவர்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வீதியில் அமைந்துள்ள பழுதடைந்த கழிப்பிடத்தை, சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சத்யா நகர் 4, 5, 6 ஆகிய தெருக்களில் விடுபட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகளை உடனடியாக துவங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை