மேலும் செய்திகள்
உலக நாடுகளுக்கு இந்தியா சொல்வது என்ன?
08-May-2025
புதுச்சேரி: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு புதுச்சேரி மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை;ஜம்மு காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மற்றும் இந்திய அரசு எடுத்துள்ள வலுவான, தீர்மானமான பதிலடி நடவடிக்கைக்கு பாராட்டுகள்.இந்நேரத்தில், இந்தியாவின் பாதுகாப்பையும், மக்களின் நன்மையும் உறுதி செய்யும் வகையில் செயல்பட்ட இந்திய பிரதமர்நரேந்திர மோடி மற்றும் நமது பாதுகாவலர்களான இந்திய ராணுவத்தினருக்கும வாழ்த்துக்கள். இந்தியாவின் அதிகாரம், பாதுகாப்பு, மற்றும் தேசிய அசைவுகளுக்கான மரியாதையை உலகிற்கு எடுத்துச்சொல்லும் இந்த நடவடிக்கைகள், பாதுகாப்பு கொள்கையில் ஒரு தைரியமான கட்டமாகும்.பயங்கரவாதம் என்பது எந்த வடிவிலும் ஏற்க முடியாத ஒன்றாகும். அதை எதிர்த்து நிற்பது ஒவ்வொரு இந்தியருக்கும் என்பதை இந்தியா மீண்டும் நிருபித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
08-May-2025