உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  உலக நன்மை வேண்டி ஒரு கோடி காயத்ரி மகா யக்ஞம்

 உலக நன்மை வேண்டி ஒரு கோடி காயத்ரி மகா யக்ஞம்

புதுச்சேரி: புதுச்சேரி வேதபாரதி சார்பில், உலக நன்மை வேண்டி, நேற்று ஒருகோடி காயத்ரி மகா யக்ஞம் நடந்தது. பாரத பண்பாட்டு அமைப்பான வேதபாரதி சார்பில் உலக நன்மை வேண்டி கடந்த 10 மாதங்களாக 200க்கும் மேற்பட் டோர் அவரவர் வீடுகளில் காயத்ரி மகா மந்த்ர ஜபம் செய்து வந்தனர். தற்போது ஒரு கோடி எண்ணிக்கையை அடைந்தையொட்டி, அதனை நிறைவு செய்யும் வகையில் நேற்று லாஸ்பேட்டை, இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 20 ேஹாம குண்டங்கள் அமைத்து 160 பேர் ஸ்ரீ காயத்ரி ஜப மகா யக்ஞம் செய்தனர். கோமாதா பூஜையில் இருந்து துவங்கி மகா யக்ஞத்தை, ராஜா சாஸ்திரிகள் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேதபாரதி பஜனோத்சவ கமிட்டி தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., வேதபாரதி தமிழக செயலாளர் வெங்கட்ராமன், புதுச்சேரி தலைவர் பட்டாபிராமன், பொதுச் செயலாளர் நடராஜன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ