உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 7ம் தேதி  ஏகதின லட்சார்ச்சனை

 லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 7ம் தேதி  ஏகதின லட்சார்ச்சனை

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில், லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உள்ளது. இங்கு, 11 நரசிம்ம பெருமாள் சுவாமிக்கு, காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையும், மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, சகஸ்கரநாம அர்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து, ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. இதில், பயநிவர்த்தி, தம்பதிகள் ஒற்றுமை, புத்திரபாக்கியம், கடன் நிவாரணம், தொழில் முன்னேற்றம், திருமண ஆகாதவர்களுக்கு, விரைவில் திருமணம் நடப்பது, சொந்த வீடு கட்டுவது ஆகிய யோகம் கிடைக்க லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில், வேத ஆகம சம்ப்ரஷ்ண லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை