உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி

ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி: மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர அமைச்சகத்தின் ரேம்ப் திட்டத்தின் கீழ், பசுமை நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி ஓட்டல் அதிதியில் நடந்தது. பிப்டிக் மற்றும் தேசிய உற்பத்திறன் மேம்பாட்டு குழுமம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், உற்பத்தி திறன் குழும சென்னை துணை இயக்குனர் விஜயராஜூ வரவேற்று, எரிசக்தி சேமிப்பின் முக்கியத்துவம், எரிசக்தி தணிக்கையின் வகைகள், எளிதில் செயல்படுத்தக்கூடிய வாய்ப்புகளைக் கண்டறிதல் மற்றும் பசுமை இல்ல வாயு கணக்கீடு குறித்து பேசினார். தேசிய சிறு தொழில் மேம்பாட்டு கழக துணைப் பொது மேலாளர் ராஜீவி, லகு உத்யோக் பாரதி புதுச்சேரி தலைவர் விஸ்வேஸ்வரன், தமிழக தலைவர் தனகோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த அமர்வுகளில் ராஜீவி, புதுச்சேரி மாவட்ட தகவல் ஆணையர் சார்லஸ் ஆகியோர், தேசிய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தேசிய சிறு தொழில் கழகம் மூலம் கிடைக்கும் திட்டங்கள் மற்றும் கடனுதவிகள், இந்திய தொழில் கூட்டமைப்பின், பிரதிநிதிகள் ‘குறியீடு 2026’ குறித்தும், ஆன்லைன் மூலம் ராம்ப் கட்டமைப்பின் கீழ் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்தும் விளக்கினர். நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளை சேர்ந்த 71 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி