மேலும் செய்திகள்
ரயிலில் சிக்கி ஒருவர் பலி
21-May-2026
புதுச்சேரி: வில்லியனுார், பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ராம்ரூப். இவரது வீட்டு எதிரில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு நேற்று மதியம் 12:30 மணியளவில் 55 வயது மதிக் கத்தக்க நபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். தகவலறிந்த வில்லியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் நேற்று முன்தினம் இரவு 7:50 மணிக்கு சென்ற புதுச்சேரி - விழுப்புரம் பாசஞ்சர் ரயில் மோதி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21-May-2026