உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அங்கக இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

அங்கக இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

வில்லியனுார்: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, வில்லியனுார் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் ஒதியம்பட்டு உழவர் உதவியகத்தில் பல்வேறு வகையான அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வில்லியனுார் துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். உழவர் உதவியக வேளாண் அலுவலர் தினேஷ்குமார் வரவேற்றார். திருக்காஞ்சி உழவர் உதவியக வேளாண் அலுவலர் தினகரன் மண் பரிசோதனை ஆய்வின்படி உரமிடுதல், இயற்கை வேளாண்மை சாகுபடியின் நன்மைகள் குறித்து பேசினார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் பிரபு, அங்கக இடுபொருட்களின் அவசியம் மற்றும் நிலங்களை காப்போம் விழிப்புணர்வு இயக்கம் குறித்தும், 3 ஜி கரைசல், மீன் அமினோ அமிலம், ஜீவாமிர்தம் தயாரிப்பு முறைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்தும் செயல்விளக்கம் அளித்தார். திருக்கனுார் முன்னோடி இயற்கை விவசாயி கலாநிதி, இயக்கை விவசாயம் குறித்து எடுத்துரைத்தார். முகாமில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாயிகளுக்கு அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு கையேடு வழங்கப்பட்டது. ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் உழவர் உதவியக களப்பணியாளர்கள், மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !