மேலும் செய்திகள்
அரசு மேல்நிலைப்பள்ளியில் காந்தி ஓவியக் கண்காட்சி
06-Oct-2025
புதுச்சேரி : லாஸ்பேட்டை புனித சூசையப்பர் குளூனி மேனிலைப் பள்ளியில் ஓவிய கண்காட்சி மற்றும் ரங்கோலி போட்டி நடந்தது. பள்ளி முதல்வர் ரோசலி கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில் பள்ளியில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் ரங்கோலி பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. எழுதுகோல் ஓவியங்கள், வண்ண ஓவியங்கள், சிறுதானியங்களின் சிறப்பை விளக்கும் ரங்கோலி மற்றும் பலதானியங்களைப் பயன்படுத்தி ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஓவியப் போட்டிகள் நடந்தது. கண்காட்சியில் மாணவிகளின் 1,110 படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனை பெற்றோர்கள் பார்வையிட்டனர். சிறந்த ஓவியங்கள் மற்றம் ரங்கோலி கோலங்கள் நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி ஓவிய ஆசிரியை ஜெயந்தி செய்திருந்தார்.
06-Oct-2025