உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஓவிய கண்காட்சி துவக்கம் 

 ஓவிய கண்காட்சி துவக்கம் 

புதுச்சேரி: புதுச்சேரி அருங்காட்சியகம் அருகே கலை பண்பாட்டுதுறை வளர்கலை கூடத்தில் 'உயிர்காக்கும் வண்ணங்கள்' பெயரில் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை துவங்க விழா நடந்தது. விழாவிற்கு, ஓவியர் இளமுருகன் வரவேற்றார். ஓய்வு பெற்ற கலை பண்பாட்டுதுறை இயக்குநர் கலியபெருமாள் தலைமை தாங்கி கண்காட்சியை துவக்கி வைத்தார். கலைமாமணி பிரபாகரன், ஒய்வு பெற்ற விரிவுரையாளர் எட்வர்டு சார்லஸ் மற்றும் எழுத்தாளர் கலாவிசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரைம்ரோஸ் பள்ளி முதல்வர் காயத்ரி, துணை முதல்வர் சுனிதா பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை வரும் ஏப்ரல் 20ம் தேதி வரை நடக்கிறது. ஏற்பாடுகளை அமைப்பாளர் ஓவியர் ரவி மற்றும் ஓவியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ