உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்காஞ்சியில் பனை விதை நடல்

திருக்காஞ்சியில் பனை விதை நடல்

வில்லியனுார் : திருக்காஞ்சி மண்வாசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஏரிக்கரை தாங்கலில் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடந்தது.நற்பணி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி, உதவி பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.நுாறு நாள் வேலை பணியாட்கள் 300க்கும் மேற்பட்டோர் ஏரிக்கரையின் இரு புறத்திலும் 3 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்.நிகழ்ச்சியில் வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தனலட்சுமி, செவிலியர் மகாலட்சுமி, ஆஷா ஊழியர் ராஜகுமாரி, அங்கன்வாடி உட்பட பலர் பங்கேற்றனர். பனை விதைகள் பூரணாங்குப்பம் ஆனந்தன் - தனசுந்தராம்பாள் சாரிடபிள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.கிராம நல ஊழியர் ராஜகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி