உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஞ்சகாவியம் பயன்பாடு செயல்முறை விளக்கம்

பஞ்சகாவியம் பயன்பாடு செயல்முறை விளக்கம்

புதுச்சேரி: வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, வில்லியனுார் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், ஒதியம்பட்டு வருவாய் கிராமத்தில் நெற்பயிரில் பஞ்சகாவியத்தை பயன்படுத்துவது பற்றிய செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.ஒதியம்பட்டு வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ், காரைக்கால் ஜவகர்லால் நேரு வேளாண் கல்லுாரி மாணவிகள் அபி பிரசன்னா, அர்ச்சனா, பிரியதர்ஷினி, கனிஷ்கா, கிளாரா கரோலின், நேகா, சினேகா, தர்ஷினி, இளவேனில் மற்றும் ஆணி தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளித்தனர்.இந்நிகழ்ச்சியில் ஒதியம்பட்டு உழவர் உதவியகத்திற்கு உட்பட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விரிவாக்க பணியாளர்கள் ஆறுமுகம், ஜெயராமன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை