உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காற்றின் பண்புகளை மையப்படுத்தி இந்திரா நகர் பள்ளியில் கண்காட்சி

காற்றின் பண்புகளை மையப்படுத்தி இந்திரா நகர் பள்ளியில் கண்காட்சி

புதுச்சேரி : காற்றின் பண்புகளை மையப்படுத்திய அறிவியல் கண்காட்சியான 'காற்றுத் திருவிழா', இந்திரா நகர் அரசு துவக்கப் பள்ளியில் நேற்று துவங்கியது. பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். இரண்டாம் வட்டம் பள்ளித் துணை ஆய்வாளர் ஹேமாவதி, கண்காட்சி குறித்து நோக்கவுரையாற்றினார். கல்வித் துறை துணை இயக்குனர் (பெண் கல்வி) மீனாட்சி, தலைமை தாங்கினார். துணை இயக்குனர் ரகுபாலன் (தொடக்கக் கல்வி), இணை இயக்குனர் கிருட்டிணராசு, பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் சூழலியல் துறைத் தலைவர் செட்ரிக் கோஷ்ரேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ராஜா நகர் அரசு துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

இக் கண்காட்சியில், பள்ளிக் கல்வித்துறையின் இரண்டாம் வட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் துவக்க வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் காற்றின் செயல்பாடுகளை மையப்படுத்தி உருவாக்கி உள்ள மாதிரிகள் இடம் பெற்றுள்ளன. மாணவ, மாணவியர்களுக்கு காற்று குறித்த ஓவியம், முழக்கம், பல்பொருளொட்டு, கதைகள், நாடகம், கட்டுரை, படத் தொகுப்பு, வினாடி வினா உள்ளிட்ட 9 போட்டிகள் நடத்தப்படுகிறது. காற்றின் விசையில் ஏவப்படும் ராக்கெட் லாஞ்சர், காற்றின் திசைக்கேற்ப இயக்கப்படும் கிளைடர் விமானம், காற்றாலை மூலம் தடையற்ற மின் உற்பத்தி, பாட்டில் நீரூற்று, மேலை நாடுகளில் ஏற்படும் டொர்னடோ சூறாவளி உள்ளிட்ட காற்றின் பல்வேறு பண்புகளை விளக்கும் வகையிலான மாதிரிகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. காற்றின் அழுத்தம் மற்றும் எடை ஆகிய பண்புகளை விளக்கும் மாதிரிகளையும் மாணவர்கள் இடம் பெறச் செய்துள்ளனர்.இன்று (21ம் தேதி) ஆசிரியர்கள் பங்கேற்கும் காற்று விளையாட்டுப் போட்டியும், மாலையில் கண்காட்சி நிறைவு விழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ