உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு பேப்பர் பை தயாரிக்கும் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு பேப்பர் பை தயாரிக்கும் பயிற்சி

புதுச்சேரி : முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், புத்தகப்பை இல்லா தினத்தையொட்டி, பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்கும் பழக்கத்தை தவிர்க்கும் பொருட்டு, பேப்பர் பை தயாரிக்கும் பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.செய்தி தாள்கள், திருமண அழைப்பிதழ்கள், காலண்டர் தாள்கள், பழைய பேப்பர் ஆகியவற்றின் மூலம், மாணவர்கள் பேப்பர் பைகள் மற்றும் கவர் தயாரித்தனர். பள்ளி நுண்கலை ஆசிரியர் இளமுருகன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள், பொறுப்பாசிரியர் மீனாட்சி, விரிவு ரையாளர் ஸ்ரீராம் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி