உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெற்றோர், ஆசிரியர் சந்திப்பு கூட்டம்

பெற்றோர், ஆசிரியர் சந்திப்பு கூட்டம்

திருக்கனுார் : வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வித்தரம், ஒழுக்கம் குறித்து பெற்றோர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். சென்னை டாடா கன்சல்டன்சி நிறுவனம் சார்பில், மாணவர்கள் இடையே நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் செந்தமிழ் செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரேணு, வேலவன், பிளோரன்சியா, சபரிநாதன், நித்தில வள்ளி, விஸ்வ பிரியா, ஸ்ரீமதி, சுகந்தி, ஓம் சாந்தி, மலர்க்கொடி, சிவரஞ்சனி, சுஜாதா, மகேஸ்வரி, சுமதி, நிஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை