உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனை சாதனை விழுப்புரம் ரயில் திண்டிவனத்துடன் திரும்பியதால் பயணிகள் ஏமாற்றம்

பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனை சாதனை விழுப்புரம் ரயில் திண்டிவனத்துடன் திரும்பியதால் பயணிகள் ஏமாற்றம்

புதுச்சேரி: சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல் முறையாக லீட்லெஸ் டூயட் சேம்பர் ஏ.வி.இ.ஐ.ஆர்., பேஸ்மேக்கர் பொருத்தும் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது. அப்போலோ மருத்துவமனையில் 80 வயதுடைய முதியவர் உயர் ரத் த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவருக்கு ஏற்கனவே ஆஞ்சியோ சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. இதய அடைப்பினால் வழக்கத்திற்கு மாறாக அவரது இதயம் மெதுவாக துடிப்பது, அடிக்கடி சுயநினைவு இழப்பது போன்ற பிரச்னைகள் இருந்தன. வழக்கமான பேஸ்மேக்கர்கள் அவருக்கு பொருத்தப்பட்டால் அவருக்கு நோய் தொற்று ஏற்படும் ஆபத்து இருந்தது. அதையடுத்து இவருக்கு சீனியர் இதயநோய் மற்றும் இதயத் துடிப்பு, இதய மின் செயல்பாட்டு நிபுணர் கார்த்திகேயன் தலைமையிலான மருத்துவ குழுவினர், லீட்லெஸ் டூயட் சேம்பர் ஏ.வி.இ.ஐ.ஆர்., பேஸ்மேக்கர் பொருத்தும் இதய அறுவை சிகிச்சை செய்து வெற்றிக் கண்டனர். இது குறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில், 'ஏ.வி.இ.ஐ.ஆர்., இரட்டை சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கர் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது, இதயத் துடிப்பு தொடர்பான சிகிச்சையில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தும். அதி நவீன தொழில்நுட்பம், லீட்ஸ்கள், சர்ஜிக்கல் பாக்கெட்டுகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய வழக்கமான அபாயங்களை நீக்குகிறது. அதே வேளையில், இதய துடிப்பின் துல்லியத்தை மருத்துவ பயனாளரின் சவுகரியத்தையும் சிறந்த அனுபவத்தையும் மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயனாளர்களுக்கு பாதுகாப்பான, மிகவும் சுவுகரியமான, நீண்டகால இதய ஆரோக்கியத்தை உறுதிசெய்ய உதவுகிறது' என்றார். திண்டிவனம்: தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் மெமு பாசஞ்சர் ரயில், திண்டிவனத்துடன் திரும்பி விடப்பட்டதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். சென்னை, தாம்பரத்திலிருந்து விழுப்புரத்திற்கு தினமும் மெமு பாசஞ்சர் ரயில் திண்டிவனம் ரயில் நிலையம் வழியாக சென்று வருகிறது. நேற்று வழக்கம் போல், தாம்பரத்தில் இருந்து காலை 9:45 மணிக்கு விழுப்புரம் நோக்கி வந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் 11:40 மணியளவில் நிறுத்தப்பட்டது. விழுப்புரம் செல்லும் வழியான முண்டியம்பாக்கத்தில் ரயில்வே இருப்பு பாதையில் பணிகள் நடந்ததால், திண்டிவனம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு, மீண்டும் மாலை 2;25 மணிக்கு தாம்பரத்திற்கு திருப்பி இயக்கப்பட்டது. இதனால் ரயிலில் விழுப்புரத்திற்கு வந்த பயணிகளும், விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு செல்ல காத்திருந்த பயணிகளும் ஏமாற்றமடைந்தனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில்வே பாதையில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணி நடப்பது வழக்கம். இதன் காரணமாக திண்டிவனம் - விழுப்புரத்திற்கும் இடைப்பட்ட விக்கிரவாண்டி ரயில் பாதையில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அதிகாரிகளின் அனுமதி பெற்று, திண்டிவனத்தில் இருந்து தாம்பரத்திற்கு திருப்பி விடப்பட்டது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி