பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு
புதுச்சேரி: சென்னை செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லததால் புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வெளியூர் செல்ல முடியமால் தவித்தனர். தொடர் விடுமுறை நாட்களில் சென்னை, பெங்களுர், ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்வது வழக்கம். சுதந்திர தின விழாவையொட்டி தொடர் விடுமுறையாக வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் விடுமுறை கொண்டாட, வெளி மாநிலத்தில் இருந்து நுாற்றுாக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்தனர். இவர்கள் விடுமுறை முடிந்து நேற்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநிலத்திற்கு செல்ல பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். போதிய பஸ் வசதி இல்லததால் வந்த பஸ்சில் பயணிகள் முன்டியடித்து ஏறினர். சிலருக்கு சீட் கிடைக்காமல் பஸ் ஸ்டேண்டில் தவித்து நின்றனர்.