பா.ஜ., அலுவலகத்தில் பட்டேல் பிறந்த நாள் விழா
பாகூர்: புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி, சர்தார் வல்லபாய் பட்டேல் குறித்து பேசினார். தொடர்ந்து, அவர், வரும் 8ம் தேதி, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற உள்ள மாபெரும் ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சியில், புதுச்சேரி இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என, அழைப்பு விடுத்தார். நிகழ்ச்சியில், பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமி நாராயணன், துணைத் தலைவர் ரத்தனவேல், பொருளாளர் ராஜகணபதி, செயலாளர் புகழேந்தி, தமிழ்மாறன், கவுரி சங்கர், சமூக ஊடகத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .