உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஜிப்மரில் சிகிச்சை பெற்ற நோயாளி தற்கொலை

 ஜிப்மரில் சிகிச்சை பெற்ற நோயாளி தற்கொலை

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நாகப்பட்டினம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன், 54; கூலித்தொழிலாளி. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை அய்யப்பன் கழிவறைக்கு செல்வதாக பணியில் இருந்த செவிலியரிடம் கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை. இவரை மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில், அய்யப்பன் நோயின் கொடுமையால் மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை