உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பவழக்குடி சித்தர் குரு பூஜை விழா

 பவழக்குடி சித்தர் குரு பூஜை விழா

திருக்கனுார்: சோம்பட்டு பவழக்குடி சித்தர் கோவிலில், குரு பூஜை விழா இன்று நடக்கிறது. திருக்கனுார் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் பவழக்குடி சித்தர் ஜீவ சமாதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்தர் ஜீவ சமாதி அடைந்த 219 ம் ஆண்டு குரு பூஜை விழா இன்று 9ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையில், கலச பூஜையுடன் கூடிய அபிஷேக ஆராதனை நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பவழக்குடி சித்தர் திருத்தொண்டு சபை மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை