உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி புவனகிரி அருகே மக்கள் போராட்டம்

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி புவனகிரி அருகே மக்கள் போராட்டம்

புவனகிரி: கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சிலுவைபுரம் கிராமத்தை ஊராட்சியாக அறிவிக்க கோரி, நேற்று குடியரசு தினத்தில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் கண்டனத்தை வௌிப்படுத்தினர்.கடலுார் மாவட்டம், கீரப்பாளையம் அடுத்த சிலுவைபுரம் கிராமம் புவனகிரி, சிதம்பரம் சட்டசபை தொகுதிகளிலும் கீரப்பாளையம், மேல் புவனகிரி ஒன்றியங்களிலும் இடம் பெற்றுள்ளது. அத்துடன் மேலவன்னியூர், வயலுார் மற்றும் லால்புரம் கிராம ஊராட்சிகளிலும் சிலுவைபுரம் பகுதி இடம் பெறுகி றது. இதனால் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள்கடந்த முறை நடந்த லோக்சபாத் தேர்தலில், எங்கள் பகுதி மூன்று ஊராட்சிகளில் இடம் பெறுவதால், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலுவை புரத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.மேலும், கடந்த டிசம்பர் 30ம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், குடியரசு தினமான நேற்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதனால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ