உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச மனைப்பட்டா கோரி மனு

இலவச மனைப்பட்டா கோரி மனு

புதுச்சேரி: கோர்க்காடு இருளர் மக்கள் இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனிடம் மனு அளித்தனர். கோர்க்காடு ஏரிக்கரையில் வசித்து வரும் இருளர் இன மக்கள் இலவச மனைப்பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, கடந்த 25ம் தேதி எலிகளை வைத்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதையடுத்து, ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் முத்தம்மா, கலெக்டர் குலோத்துங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியை பார்வையிட்டு, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றினர். ஆனால், இலவச மனைப்பட்டா வழங்கவில்லை.இதையடுத்து, வி.சி., மாநில நிர்வாகி ஏகாம்பரம் தலைமையில் இருளர் இன மக்கள், ஆதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனை, சந்தித்து இலவச மனைப்பட்டா கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட இயக்குனர், விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும் என, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ