மேலும் செய்திகள்
அண்ணாதுரை பிறந்தநாள் விழா
16-Sep-2025
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் கான்கிரீட் சாலை அமைப்பது குறித்து பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணனிடம், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோபால் மனு அளித்தார். மனுவில், உருளையன்பேட்டை தொகுதி, ராஜிவ் காந்தி நகர், எம்.ஜி.ஆர்., வீதியில் உள்ள கால்வாய் 20 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இதில், உள்ள சிலாப்கள் முற்றிலும் சிதைந்து விட்டதால், இதன் மீது முழுமையாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த முறையில் சாலை அமைத்தால் எதிர்க்காலத்தில் இதனை சுத்தம் செய்ய முடியாது. கடந்த மழை காலத்தில்இந்த பகுதி மழைநீரால் பாதிக்கப்பட்டது. அதனால் இந்த வாய்க்காலை முழுமையாக துார் வாரி எதிர் காலத்தில் சுத்தம் செய்யும் விதமாக அமைக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது தொகுதி தலைவர் ஆதிநாராயணன்,செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் சுப்பு, தொகுதி செயற்குழு உறுப்பினர் புவியரசு, துணை செயலாளர் மூர்த்தி, இளைஞர் அணி அன்பழகன், முருகானந்தம், மாணவரணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.
16-Sep-2025