உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீனவர்களை விடுவிக்க கோரி முதல்வரை சந்தித்து மனு

மீனவர்களை விடுவிக்க கோரி முதல்வரை சந்தித்து மனு

புதுச்சேரி : இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் என உறவினர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர்கைது செய்தனர். இந்நிலையில் காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் புதுச்சேரி வந்து முதல்வர் ரங்கசாமி, மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோரை சந்தித்து அவர்களை மீட்கக்கோரிமனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, அவர்களை விடுவிக்க கடிதம் எழுதி இருப்பதாகவும் காயம் அடைந்ததற்கு உரிய சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ