உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அண்ணா கல்லூரியில் இயற்பியல் கருத்தரங்கம்

அண்ணா கல்லூரியில் இயற்பியல் கருத்தரங்கம்

காரைக்கால் : காரைக்கால் அண்ணா கல்லூரியில் பன்னாட்டு இயற்பியல் கருத்தரங்கம் நடந்தது.காரைக்கால் அண்ணா அரசு கல்லூரி மற்றும் கருணாநிதி அரசு முதுகலை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயற்பியல் துறைகள் இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் ஆசாத்ராஜா தலைமை தாங்கினார். திருவாரூர் மத்திய பல்கலையின் இயற்பியல் மைய தலைவர் ரவிசந்திரன், பொது மேலாளர் மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.என்.ஜி.சி.,செயல்துறை இயக்குநர் உதய பஸ்வான் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் ரெங்கையன் வாழ்த்துரை வழங்கினார்.கருத்தரங்கில் குரேசியா, லண்டன், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர். இந்தியாவின் 18 மாநிலங்களை சேர்ந்த பேராசிரியர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை பகிர்ந்தனர். இதில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் இயற்பியல் துறை தலைவர் கல்யாணசுந்தரம், தாவரவியல் துறை தலைவர் கதிர்வேலு சம்மந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை