வில்லியனுார் மாதா ஆலயத்திற்கு பாதயாத்திரை நாளை துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து வில்லியனுார் மாதா ஆலயத்திற்கு பரிகார பாதயாத்திரை நாளை 12ம் தேதி நடக்கிறது,இதுகுறித்து, வில்லியனுார் துாய லுார்தன்னை பங்குத்தந்தை ஆல்பர்ட் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் கடந்த 1977ம் ஆண்டு அக்டோபர் மாதம் கரையை கடக்கும் புயலால், பேரழிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி- கடலுார் மறைமாவட்ட பேராயர் வெண்மணி செல்வநாதர் தலைமையில் வில்லியனுார் மாதாவிடம் ஜெபித்ததின் பயனாக, புயல் வேறு இடத்தில் கரையை கடந்தது.அதற்காக, நன்றி தெரிவிக்கும் வகையில், புதுச்சேரியில் இருந்து வில்லியனுார் மாதா கோவிலுக்கு, பரிகார பாதயாத்திரை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2வது சனிக்கிழமை நடந்து வருகிறது.அதன்படி, இந்தாண்டு 46வது பரிகார பாதயாத்திரை வரும் 12ம் தேதி மதியம் 2:00மணிக்கு புதுச்சேரி மிஷன் வீதி புனித ஜென்மராக்கினி மாதா ஆலயத்தில் துவங்குகிறது.புதுச்சேரி- கடலுார் உயர் மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி பாதயாத்திரையும், பங்குத்தந்தை ரொசாரியோ தேர்பவனியையும் துவக்கி வைக்கின்றனர். மாலை 5:30 மணிக்கு வில்லியனுார் மாதா ஆலயத்தில் புதுச்சேரி- கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் பரிகார திருப்பலி நடக்கிறது.