உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அலையாத்தி மரக் கான்றுகள் நடும் பணி 

 அலையாத்தி மரக் கான்றுகள் நடும் பணி 

புதுச்சேரி: புதுக்குப்பம் சுண்ணாம்பாறு சாண்டியூன்ஸ் பேரடைஸ் பீச் பகுதியில் கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் சார்பில், அலையாத்தி மரக் கன்றுகள் நடும் பணி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அனிதா பாலகிருஷ்ணன், கீர்த்தி, மூர்த்தி, கபிலன், மகேஷ், சாண்டியூன்ஸ் பேரடைஸ் பீச் நிறுவன ஊழியர்கள், இயற்கை ஆர்வலர்கள், கல்லுாரி மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் என பலர் கலந்துக் கொண்டு மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கத்தின் நிறுவனர் ராஜா மற்றும் ரேகா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை