உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தொண்டமாநத்தத்தில் மரக்கன்று நடவு

 தொண்டமாநத்தத்தில் மரக்கன்று நடவு

வில்லியனுார்: தொண்டமாநத்தம் கிராமத்தில் வேளாண் கல்லுாரி மாணவிகள் மரக்கன்றுகள் நட்டனர். வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகளின் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி முகாம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு, மரம் நடுவதால் ஏற்படும் முக்கியத்துவங்கள் குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் எடுத்து கூறினர். நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள் சக்திமுருகன், சேகர், மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவிகள் மோனிஷா, மேகலா, மித்ரா, மாடகோபி சந்திராமகாலட்சுமி, பார்கவி, நந்தினி, ேஹமதுர்கா, லாவண்யா, கிர்த்திகா மற்றும் லோகேஷ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை