மேலும் செய்திகள்
செக்யூரிட்டி உயிரிழப்பு
26-Aug-2025
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அருகே கடல் அலையில் சிக்கி பிளம்பர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், பாக்கம் கூட்ரோடு, வெள்ளாழக்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ், 37; பிளம்பர். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன், பைக்கில் தவளக்குப்பம் அருகே உள்ள புதுகுப்பம் கடற்கரைக்கு வந்தார். கடலில் சுரேஷ், அவரது மனைவி, இரு மகள்கள், மாலை 4:30 மணியளவில், குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடல் அலையில் சுரேஷ் இழுத்து செல்லப்பட்டார். குளித்து கொண்டிருந்த அவரது மனைவி கூச்சலிடவே, அருகில் இருந்த மீனவர்கள், ஓடிவந்து, அலையில் சிக்கிய, அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வெள்ளாழக்குப்பம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
26-Aug-2025