முன்னாள் சபாநாயகர் பிறந்தநாள் பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து
புதுச்சேரி: பிறந்தநாள் விழா கொண்டாடிய முன்னாள் சபாநாயகர் செல்வத்திற்கு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மின்னஞ்சல் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் சபாநாயகர் செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மின்னஞ்சல் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்., விக்னேஸ்வரன், மோகன்தாஸ், அய்யப்பன், முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ., ரமேஷ், பாஸ்கர், அசோக் பாபு, மற்றும் மாநில பா.ஜ., நிர்வாகிகள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மணவெளி தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் ஏராளமானோர் நே ரில் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் சபாநாயகர் செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு, மணவெளி தொகுதியில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக பூராணங்குப்பம் அங்காளம்மன் கோவில் உட்பட பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.