உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பிரதமர் மோடி புதுச்சேரி வருகை: பா.ஜ., மாநில தலைவர் தகவல்

 பிரதமர் மோடி புதுச்சேரி வருகை: பா.ஜ., மாநில தலைவர் தகவல்

புதுச்சேரி: பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார்' என பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9ம் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இளைஞர் சக்தியை அடித்தளமாக கொண்டு, உற்பத்தி, உள்கட்டமைப்பு மற்றும் சிறு, குறு தொழில்களின் நீண்டகால வளர்ச்சியை மையமாக கொண்டு இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'வளர்ந்த இந்தியா' எனும் இலக்கை நோக்கிய பயணத்தில், நாட்டின் பொருளாதாரப் பாதையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல் கல்லாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. நடப்பாண்டில் மூலதனச் செலவிற்கு 10 சதவீதம் உயர்த்தி ரூ.12.20 லட்சம் கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் வளர்ச்சியில் மத்திய அரசு காட்டும் அக்கறையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. பிரதமர் மோடி, வரும் 15ம் தேதிக்குள் புதுச்சேரிக்கு வர வாய்ப்பு உள்ளது. லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.,வில் சேர வாய்ப்பில்லை. லட்சிய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, செய்தி தொடர்பாளர் அருள்முருகன், மாநில ஊடகத்துறை தலைவர் நாகேஸ்வரன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ