உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீசார் பைக் ரோந்து பணி டி.ஐ.ஜி., துவக்கி வைப்பு

போலீசார் பைக் ரோந்து பணி டி.ஐ.ஜி., துவக்கி வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதியில் போலீசார் பைக் ரோந்துப் பணியினை டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் துவக்கி வைத்தார்.புதுச்சேரி நகரப்பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளி மாநில, உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பெரும் அவதியடைகின்றனர்.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிக்கு போக்குவரத்து போலீசார் போலீஸ் ஜீப்பில் செல்ல காலதாமதம் ஆவதால், பைக் ரோந்துப்பணி செல்ல போலீஸ் துறை மூலம் பைக் வாங்கப்பட்டது.இந்த பைக்குகள் போலீசாருக்கு வழங்கப்பட்டு, இதன் பைக் ரோந்துப் பணியினை டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை