உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏட்டுவை தாக்கிய போலீஸ் டிரைவர் கைது

ஏட்டுவை தாக்கிய போலீஸ் டிரைவர் கைது

புதுச்சேரி: போலீஸ் மோட்டார் வாகன பிரிவில் ஏட்டுவை தாக்கிய போலீஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி போலீஸ் மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றும் சீனியர் டிரைவர்களுக்கும், அங்குள்ள போலீஸ் உயர் அதிகாரிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு இருந்து வந்தது.வயதான சீனியர் டிரைவர்களை உயர் அதிகாரிகள்டார்ச்சர் செய்வதாக உள்துறை அமைச்சரிடம் புகார் அளித்தனர். அடுத்த சில நாட்களில் சீனியர் டிரைவர்களுக்கு மெமோ வழங்கப்பட்டது. இந்நிலையில், போலீஸ் மோட்டார் வாகன பிரிவு டிரைவர் கங்காதரன், 59;தனது கோரிக்கை தொடர்பாக துறை ரீதியாக விண்ணப்பம் அளித்துள்ளார். தனது விண்ணப்பம் அனுப்பட்டு விட்டதா என அங்குள்ள ஏட்டு ஜெயச்சந்திரனிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. ஜெயச்சந்திரன் காயமடைந்தார். ஜெயச்சந்திரன் டி.நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் திட்டுதல், அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கங்காதரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி