உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவி படம் தவறாக சித்தரிப்பு மாணவர் மீது போலீசார் வழக்கு

மாணவி படம் தவறாக சித்தரிப்பு மாணவர் மீது போலீசார் வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து வாட்ஸ் ஆப்பில் பதிவிட்ட மாணவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். .புதுச்சேரி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இதில் 22 வயது மாணவி ஒருவர் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் துறையில் ஐந்தாண்டு பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். மேலும், இவர் விடுதியின் மேலாண்மை குழுவிற்கும், பல்கலைக்கழக மாணவர் குழுவிற்கும் தலைவராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வரலாறு துறையில் படித்துவரும் மாணவரான சூர்ய நாராயணன்,23; மாணவிக்கு கண்ணிய குறைவை ஏற்படுத்தும் வகையில் தவறாக சித்தரித்து புகைப்படங்களை எடுத்து, அதனை பல்கலைக்கழகத்தில் படிக்கும் பிற மாணவர்களுக்கும் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார். மாணவி புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி