மேலும் செய்திகள்
ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
21-Nov-2024
ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
12-Nov-2024
திருக்கனுார் : புயல் எதிரொலியால், சந்தை புதுக்குப்பம் காலனி குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து, அப்பகுதி மக்கள் அரசு பள்ளி மற்றும் சமுதாய நலக்கூடம் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.இதற்கிடையே, நேற்று மதியம் 12:00 மணி அளவில் கனமழையின் போது பாதுகாப்பு மையத்தில் தங்கியிருந்த வாய் பேச முடியாத கர்ப்பணி பெண் ஒருவர் திடீரென பிரசவ வலி ஏற்பட்டு துடித்துடித்தார்.தகவலறிந்த காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் அப்பெண்ணை மீட்டு, தங்களது ஜிப் மூலம் காட்டேரிக்குப்பம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.பின், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அப்பெண்ணை போலீசார் பத்திரமாக அனுப்பினர். பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு காட்டேரிக்குப்பம் போலீசார் உதவிய சம்பவம் அப்பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
21-Nov-2024
12-Nov-2024