உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தம்பதி மாயம்: போலீசார் விசாரணை

தம்பதி மாயம்: போலீசார் விசாரணை

புதுச்சேரி: வில்லியனுார் அருகே புதுமண தம்பதி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லியனுார் வி.மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் குமார், இவரது மகன் ஜெயராமன், 28; இவருக்கு திருவண்ணமாலை பகுதியைச் சேர்ந்த சூர்யா, 24; என்பவருடன் கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. ஜெயராமன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை தாய் வள்ளி கண்டித்துள்ளார். இதனால் தாயிடம் கோவித்துக் கொண்டு கடந்த 22ம் தேதி மதியம் ஜெயராமன், அவரது மனைவி சூர்யா ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர்கள் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !