மேலும் செய்திகள்
வீட்டில் நகை திருட்டு மர்ம நபருக்கு வலை
23-Jul-2025
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துமனையில் நகையுடன் மாயமான நபரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், செண்பகம் பேட்டையை சேர்ந்தவர் ராஜம்,63; இவர் தனது மகளை கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். இதற்காக, தனது உறவினரான தட்டாஞ்சாவடி, வி.வி.பி. நகர் பெரியசாமி வீட்டில் தங்கியிருந்த ராஜம், கடந்த மாதம் 4ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில், அறுவை சிகிச்சை முடிந்து சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகளை பார்க்க சென்றார். அப்போது, வார்டிற்கு வெளியே நின்றிருந்த நபர், தங்க நகை போட்டுக் கொண்டு உள்ளே போகக்கூடாது என்றார். அதனை நம்பிய ராஜம், தான் அணிந்திருந்த 4 சவரன் நகையை ஒரு பையில் வைத்து, அங்கிருந்த அடையாளம் தெரியாத நபரிடம் கொடுத்து விட்டு சென்றார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த நபரை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.
23-Jul-2025