பெண் தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த செந்தில் என்பவரும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது கணவர் கண்டித்தால், அந்த பெண் செந்திலிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். கடந்த 8 ம் தேதி பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த செந்தில், தன்னிடம் பேசுமாறு கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அங்கிருந்து சென்றார். பின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து அப்பெண், அவரது உறவினருடன் செந்தில் வீட்டிற்கு சென்று கேட்டபோது, தகராறு ஏற்பட்டு, செந்தில் பெண்ணின் உறவினரை தாக்கினார். தொடர்ந்து, கடந்த 10ம் தேதி செந்தில், அவரது மனைவி உள்ளிட்ட 4 பேர், அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை, உறவினர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பெண் அளித்த புகாரின் பேரில், தன்வந்தரி நகர் போலீசார் தற்கொலைக்கு துண்டியதாக செந்தில், அவரது மனைவி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.