உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கம்பி வேலி சேதம் போலீஸ் விசாரணை

கம்பி வேலி சேதம் போலீஸ் விசாரணை

பாகூர்: தனியார் இடத்தில் அமைத்திருந்த கம்பி வேலியை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.குருவிநத்தம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் நாராயணன் 57; இவருக்கு சொந்தமான பூர்வீக இடம் குருவிநத்தம் பெரியார் நகர் புற்றுக்கோவில் அருகில் உள்ளது. இந்த இடத்தில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிமெண்ட் கம்பம் நட்டு, கம்பி வேலி அமைத்திருந்தார்.இந்நிலையில், கடந்த 28ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் சிமெண்ட் கம்பம் மற்றும் கம்பி வேலியை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதன் மதிப்பு சுமார் 1 லட்சம் ஆகும். இது குறித்து நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஹமீது உசேன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, கம்பி வேலியை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ