| ADDED : பிப் 21, 2024 01:41 AM
பாகூர் : சகோதரர்களை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் 38; பெயிண்டர். இவரது தம்பி சுரேஷ் 37; டிரைவர். இருவரும் கடந்த 18ம் தேதி, கரையாம்புத்துாரில் உள்ள தனியார் மதுபான கடையில் மது அருந்தி விட்டு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டனர்.அப்போது, களிஞ்சிக்குப்பம் சாலையில் உள்ள தனியார் பார் அருகே நின்றிருந்த அவரது நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பாருக்குள் இருந்து வெளியே வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், ரமேஷ், அவரது தம்பி சுரேஷ் இருவரையும் ஆபாசமாக திட்டி தடியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றனர். அதில் படுகாயமடைந்த இருவரும் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து ரமேஷின் மனைவி சுதா 36; அளித்த புகாரின் பேரில் கரையாம்புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து, நான்கு பேரையும் தேடிவருகின்றனர்.