உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நேரு வீதியில் போலீசார் அணிவகுப்பு

நேரு வீதியில் போலீசார் அணிவகுப்பு

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி, போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குற்றங்களை தடுக்க சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவின் பேரில், முத்தியால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு, பொதுமக்கள் அதிக அளவில் கூடும் நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நேற்று இரவு, நேரு வீதியில், பெரியக்கடை போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். தொடர்ந்து, முக்கிய வீதிகளில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை