மேலும் செய்திகள்
மகா விஷ்ணுவிற்கு சிறப்பு அபிஷேகம்
31-Dec-2025
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பாகூர் போலீசார் சிறப்பு வழிபாடு செய்தனர். பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், ஆங்கில புத்தாண்டு அன்று, பாகூர் போலீசார் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, புத்தாண்டையொட்டி, நேற்று பாகூர் போலீசார், மூலநாதர் சுவாமி கோவிலில், அமைதி வேண்டியும், குற்றங்கள் குறையவும், சிறப்பு வழிபாடு செய்தனர். இதையொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு, மாணிக்கவாசகர் அருளிய திருவாசக பாடல்கள் பாடப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து, 5:00 மணிக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் போன்ற திரவியங்களால் மூலநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 1,008 சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. தெற்கு பகுதி எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், பாகூர் சரக இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர்கள் நந்தக்குமார், சந்திரசேகர், உதவி சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
31-Dec-2025