ஓட்டல்கள், விடுதிகளில் போலீசார் சோதனை
புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி முதலியார்பேட்டை போலீசார் ஓட் டல்களில் ஆய்வு செய்தனர். புதுச்சேரியில் சட்டசபை தேர்தலையொட்டி, முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் போலீசார் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ஓட்டல் நிர்வாகிகளிடம் வெளியூரில் இருந்து ஓட்டலில் வந்து தங்குபவர்களின் விபரங்களை குறித்து கேட்டறிந்த போலீசார், சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, தெரிவித்தனர்.