போலீசார் பறிமுதல் செய்த ஆட்டோ எரிந்ததால் பரபரப்பு
புதுச்சேரி: போலீசார் பறிமுதல் செய்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி கிழக்கு பகுதி, போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பெரிய வாய்க்கால் மீது உள்ள பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள ஒரு ஆட்டோ நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தீ விபத்திற்கான காரணம் குறித்து பெரியக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.